ஆறு மாத குழந்தைக்கு ஆறடி உயரத்தில் ஜிப்பா தைத்த மாதிரி, பொருந்தாத பிரமாண்டம்! பத்து வேடங்களில் நடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தை, கமல் தனது திரைக்கதையிலும் காட்டியிருந்தால் அவரை நிஜமான அவதார புருஷராகவே கொண்டாடியிருக்கலாம்! பட், பில்டிங் ஸ்டிராங்...பேஸ்மெண்ட் ரொம்ம்ம்ம்ப வீக் சாமி!
மேலும்..
Posted on 16 Jun 2008
காத்தவராயன் - விமர்சனம்
குவார்ட்டர் கோவிந்தன்களுக்காக 'சரக்கு' தயாரிக்கும் ஒருவனின் கதை. சாராய நெடியை விட பிரச்சார நெடி கொஞ்சம் ஓவர்! கம்பீரமாக ருசிக்க வேண்டிய சரக்குதான்! பட்...?
மேலும்..
Posted on 09 Jun 2008
வல்லமை தாராயோ - விமர்சனம்
பாரதியின் வரிகளை தலைப்பில் வைத்துக் கொண்டு பெண் ஒருத்தியின் பிரச்சனையை பேசாமல் இருந்தால் எப்படி? கட்டியவனின் காதலை வெட்டி விடவும், காதலனை கட்டிக் கொண்டு முத்தமிடவும், தவியாய் தவிக்கும் சாயாசிங்கின் மன ஓசைகள்தான் படம் மொத்தமும். இந்தோனேஷியாவில் வளர்ந்தாலும், இஞ்சிமரபா மாதிரி காரம் குறையாத கதையை கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் மதுமிதா!
மேலும்..
Posted on 09 Jun 2008
பாண்டி - விமர்சனம்
உதவாக்கரை பிள்ளை, குடும்பத்தின் மீது காட்டும் அக்கறைதான் கதை! உசிலம்பட்டி பாண்டி, துபாய் தோட்டியாக மாறுவதன் பின்னணி என்ன? காரசார காதல், கரைய வைக்கும் சென்ட்டிமென்ட், கலவரமூட்டும் ஜோக் என்று இரண்டரை மணி நேரத்தை இரண்டு நிமிடமாக ஓட வைக்கிறார் இயக்குனர் ராசு மதுரவன். சபாஷ்!
மேலும்..
Posted on 09 Jun 2008
அரசாங்கம் - விமர்சனம்
கோயம்பேட்டில் நின்று கொண்டு லாகூருக்கே கேட்கிற மாதிரி வசனம் பேசும் விஜயகாந்த் படம்தானே என்ற அலட்சியத்தோடு உள்ளே போகிறவர்கள் முகத்தில் ஒரு கப் ஐஸ் வாட்டரை நச்சென்று ஸ்பிரே செய்கிறார் மாதேஷ். இது வேற மாதிரி படம் மச்சி...
மேலும்..
Posted on 16 May 2008
சிலந்தி - விமர்சனம்
விருந்துக்கு முன்பு தரும் வெல்கம் டிரிங்க் மாதிரி மெயின் படத்தை துவங்கும் முன்பே ஒரு ஜோடியை காட்டுகிறார்கள். நரம்பை முறுக்கேற்கிறது இந்த ஜோடி. அவர்களை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு இன்னொரு ஜோடியை நோக்கி தாவுகிறது கேமிரா. இது இரண்டாவது ஜோடியின் ஹனிமூன்! அவர்களுக்கு அது ஹனிமூனா? சனிமூனா? திடுக்கிட வைக்கும் மிரட்டல்களுடன் கதை நகர, மோனிகாவின் முன்னழகை ரசிகர்களின் கண்களுக்குள் விதைத்த திருப்தியோடு சுபம்!
மேலும்..
Posted on 11 May 2008
குருவி - விமர்சனம்
ஆந்திரா காரத்தையும், தமிழ்நாட்டு ஈரத்தையும் கலந்து பிசைந்த மசாலா மிக்ஸ். குருவியாக மலேசியாவுக்கு பறக்கிற விஜய், அங்கே த்ரிஷாவை சந்திக்கிறார். வழக்கம்போல் ஜோடியின் அண்ணனே எதிரி.
மேலும்..
Posted on 08 May 2008
வசூல் - விமர்சனம்
ஏதோ டப்பிங் படமாக இருக்கும் என்று நினைத்து உள்ளே போனால் இது டக்கர் படம்! நடிகைகளை காதலித்தால் என்ன நடக்கும் என்பதை கண்கூடாக காண்பிக்கிறார்கள். வித்யாசமான கதைக்களம். வில்லங்கமான சதைக் களம்.
மேலும்..
Posted on 07 May 2008
இயக்கம் - விமர்சனம்
ஒரு இயக்கத்தை பற்றிய படம் என்பதால் இயக்கம்! இஞ்ச் டேப் வசனங்கள், இறுக்கமான முகங்கள் என்று ஆக்ஷன் படங்களுக்குரிய அம்சங்கள் தூவப்பட்டிருந்தாலும், காதலும் இருப்பதால் சற்றே ரிலாக்ஸ்.
மேலும்..
Posted on 02 May 2008
நேபாளி
அந்நிய(ன்) நாட்டு சரக்கு. ச்சும்மா காரம் தலைக்கேறுகிறது. நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய கதையை 3 துண்டுகளாக வெட்டி முப்பரிமாணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கரும்பை எத்தனை துண்டு வெட்டினால் என்ன? இனிப்பு இனிப்புதானே?
மேலும்..